Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்களின் விவரங்கள்-தேர்தல் துறை வெளியிட்டது

சிங்கப்பூரின் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்களுக்குச் செல்லலாம்.

வாசிப்புநேரம் -
9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்களின் விவரங்கள்-தேர்தல் துறை வெளியிட்டது

கோப்புப் படம்

சிங்கப்பூரின் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்களுக்குச் செல்லலாம்.

அதன் விவரங்களைத் தேர்தல் துறை வெளியிட்டது.

இம்முறை 93 தேர்தல் தொகுதிகள் இருக்கும்.

முன்னைய ஆண்டுகளைப் போல், அவை அனைத்தும் பள்ளிகளில் அமைந்துள்ளன.

1. பெண்டமியர் தொடக்கப்பள்ளி

- பீஷான்-தோ பாயோ
- ஜாலான் புசார்
- ராடின் மாஸ்
- தஞ்சோங் பகார்

2. சொங் ஃபூ பள்ளி

- கெபுன் பாரு
- மார்சிலிங்-இயூ டீ
- நீ சூன்
- செம்பவாங்

3. டெயி உயர்நிலைப்பள்ளி

- அல்ஜூனிட்
- அங் மோ கியோ
- மேரிமவுண்ட்
- இயோ சூ காங்

4. ஜூரோங் பயனியர் தொடக்கக் கல்லூரி

- சுவா சூ காங்
- ஹோங் கா நார்த்
- பயனியர்

5. கோங் ஹூவா பள்ளி

- மெக்பர்சன்
- மரீன் பரேட்
- மவுண்ட்பேட்டன்
- பொத்தோங் பாசிர்

6. மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி

- புக்கிட் பாஞ்சாங்
- ஹாலந்து-புக்கிட் தீமா

7. நான் ஹூவா ஹை பள்ளி

- புக்கிட் பாத்தோக்
- ஜூரோங்
- வெஸ்ட் கோஸ்ட்
- யூஹுவா

8. பொய் சிங் பள்ளி

- ஹவ்காங்
- தெம்பனிஸ்

9. செயிண்ட் ஆண்டனி கெனோசியன் தொடக்கப்பள்ளி

- ஈஸ்ட் கோஸ்ட்
- பாசிர் ரிஸ்-பொங்கோல்
- பொங்கோல் வெஸ்ட்
- செங்காங்

உத்தேச வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை: $13,500

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்தரப் படித்தொகைக்கு நிகரானது அந்த வைப்புத்தொகை.

தேசியச் சுற்றுப்புற அமைப்பின் தலைமை அதிகாரியான திரு. டான் மெங் டுய் (Tan Meng Dui), இந்த ஆண்டு தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றுவார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்