Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தனது தடுப்புமருந்தின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் கோரும் Novavax

அமெரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனமான Novavax சிங்கப்பூரில் அதன் COVID-19 தடுப்புமருந்தின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் கோரியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் தனது தடுப்புமருந்தின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் கோரும் Novavax

(படம்: AFP)

அமெரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனமான Novavax சிங்கப்பூரில் அதன் COVID-19 தடுப்புமருந்தின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் கோரியிருக்கிறது.

அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் புரதத்தை அடிப்படையாகக் கொண்ட COVID-19 தடுப்பூசி சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவது முதல்முறையாக இருக்கும்.

Novavax தடுப்புமருந்தை ஆய்வு செய்வதாக சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆய்வுக்குச் சில வாரங்களோ, சில மாதங்களோ ஆகலாம் என அது கூறியது.

அது சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்கு முழுமையாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தது.

அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும் 30,000 பேரிடம் Novavax தடுப்புமருந்துக்கான மூன்றாம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.

Novavax தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக்கொண்டவர்களுக்கு COVID-19 நோயின் மிதமான அல்லது கடுமையான பாதிப்புகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவது சாத்தியம் என்பது அதில் தெரியவந்தது.

சுமார் 90 விழுக்காடு நோய்த்தடுப்பு ஆற்றலை அந்தத் தடுப்புமருந்து கொண்டிருப்பதாகவும் பதிவானது.

பிரிட்டனில் 15,000 பேரிடம் Novavax தடுப்புமருந்து சோதிக்கப்பட்டது.

COVID-19 கிருமியைத் தடுக்க சுமார் 96 விழுக்காட்டு ஆற்றலையும் அதன் இதர கிருமிவகைகளைத் தடுக்க சுமார் 86 விழுக்காட்டு ஆற்றலையும் அந்தத் தடுப்புமருந்து கொண்டுள்ளதாகத் தெரியவந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்