Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்துக்கு நன்கொடை திரட்டு

பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்திற்குச் சுமார் 122,000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்துக்கு நன்கொடை திரட்டு

(படம்: Facebook/ItsRainingRaincoats)

பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்திற்குச் சுமார் 122,000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.

28 வயது வேல்முருகன் முத்தையன், நொவீனா வட்டாரத்தின் ஜாலான் டான் டொக் செங் (Jalan Tan Tock Seng) பகுதியில் மறுவாழ்வு நிலையத்துக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சம்பவத்துக்குச் சில நாள்கள் முன்னர் தான், தமது மனைவி கர்ப்பமாக உள்ளதை வேல்முருகன் அறிந்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பான ItsRainingRaincoats, இத்தகவலை வெளியிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூரில் பணிபுரிந்த வேல்முருகன், அண்மையில் தமது திருமணத்திற்காக இந்தியாவிற்குச் சென்றார்.

சிங்கப்பூர் திரும்பிய அவர், LKT Contractors நிறுவனத்தில் சம்பவம் நேரும் முன், சுமார் 3 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்திருந்தார்.

அவரின் உடல் இன்று இந்தியாவிற்கு அனுப்பப்படும்.

அவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ItsRainingRaincoats இணையம் வழியாக நன்கொடை திரட்டி வருகிறது.

மேல் விவரங்களுக்கு: http://itsrainingraincoats.give.asia/cranecollapsevictim

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்