Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வனவிலங்கு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கவிருக்கிறது தேசியப் பூங்காக் கழகம்

தேசியப் பூங்காக் கழகம், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, வனவிலங்கு தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
வனவிலங்கு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கவிருக்கிறது தேசியப் பூங்காக் கழகம்

படம்: NParks

தேசியப் பூங்காக் கழகம், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, வனவிலங்கு தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கவிருக்கிறது.

அத்துடன் உணவாகப் பயன்படுத்த முடியாத தாவரங்கள் மற்றும் விலங்குகள் தொடர்பான விவகாரங்களையும் கழகம் கண்காணிக்கும்.

தற்போது வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அத்தகைய  விவகாரங்களை நிர்வகித்து வருகின்றது.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்திடமிருந்து அந்தப் பொறுப்புகளை தேசியப் பூங்கா கழகத்திற்கு மாற்றுவது குறித்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

புதிய, விலங்கு-கால்நடைச் சேவையை நிறுவ அந்த மாற்றம் வழிவகுக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) தெரிவித்தார். விலங்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு முக்கிய சேவை மையமாக அது திகழும் என்றார் திருவாட்டி சுன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்