Images
  • NParks
    (படம்: Handout)

பூங்காவுக்குள் சட்டவிரோதமாகக் குழுவை அழைத்துச் சென்ற தொண்டூழியருக்கு அபராதம்


(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

செயல்பாட்டு நேரத்திற்குப் பிறகு இயற்கை ஆர்வலர் குழுவைப் பூங்காவுக்குள் அழைத்துச் சென்ற தொண்டூழியருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பென் லீ சின் தியொங் (Ben Lee Chin Tiong) எனும் அந்த 58 வயது ஆடவர் தேசியப் பூங்காக் கழகத்தில் தொண்டூழியராகப் பணியாற்றிவருகிறார்.

பிப்ரவரி 20 ஆம் தேதி, நேச்சர் டிரெக்கர் (Nature Trekker) எனும் இயற்கை ஆர்வலர் குழு வின்ட்சர் (Windsor) இயற்கைப் பூங்காவில் இரவு நேர படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார் லீ.

இரவு வேளையில் பூங்காவிற்குச் செல்ல தான் அனுமதிபெற்றுள்ளதாக குழுவினரிடம் அவர் கூறியிருக்கிறார்.

பூங்கா இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

இரவு 8.30 மணி அளவில் லீயின் பணிப்பெண் உட்பட 7 பேர் பூங்காவினுள் நுழைந்தனர்.

அதனைத் தேசிய பூங்காக் கழக அதிகாரி கவனித்திருக்கிறார்.

மேலும் இரு அதிகாரிகளுடன் சென்று குழுவைக் கண்டுபிடித்து அங்கிருந்து வெளியேற்றினார் அதிகாரி.

லீ 8 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு 4,700 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.


 

Top