Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அனுமதியின்றி தேசிய சேவையைத் தள்ளிப்போட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

முறையான அனுமதியின்றி தேசிய சேவையை 5 ஆண்டு தள்ளிப்போட்ட 22 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அனுமதியின்றி தேசிய சேவையைத் தள்ளிப்போட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

(படம்: Jeremy Long/CNA)


முறையான அனுமதியின்றி தேசிய சேவையை 5 ஆண்டு தள்ளிப்போட்ட 22 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜானதன் லீ ஹான் வென் (Jonathan Lee Han Wen), 2013ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் வரை வெளிநாட்டில் தங்கியிருந்தார். தேசிய சேவை செய்யவேண்டிய காலத்தில் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.

தேசிய சேவைச் சட்டத்தின்கீழ் அவர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தேசிய சேவைக்குப் பதிந்துகொண்டோர் உரிய அனுமதியின்றி சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதோ, சிங்கப்பூருக்கு வெளியே தங்குவதோ கூடாது.

அத்தகைய குற்றங்கள் கடுமையாகக் கருதப்படும் என்று தற்காப்பு அமைச்சு ஏற்கனவே கூறியிருக்கிறது.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் லீக்கு மூவாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ, அதிகபட்சமாக பத்தாயிரம் வெள்ளி அபராதமோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்