Images
  • NS
    (படம்: Mediacorp)

தேசிய சேவையை மூவாண்டுக்கும் மேலாகப் புறக்கணித்த ஆடவருக்கு 7 வாரச் சிறை

தேசிய சேவையை மூவாண்டுக்கும் மேலாகப் புறக்கணித்த 25 வயது ஆடவருக்கு 7 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸாலே செங் ஸி ஸியோங் (Zaley Cheng Xi Xiong), 2014ஆம் ஆண்டு, தேசிய சேவைக்கான அறிவிப்புக் கடிதம் கிடைத்த ஒரு மாதத்திற்குப் பிறகு சிங்கப்பூரை விட்டு வெளியேறினார்.

சிங்கப்பூரில் வசிக்கும் அவரது தந்தைக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 2017ஆம் ஆண்டில் அவர் நாடு திரும்ப முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது.

செங், 2014ஆம் ஆண்டு முழுநேர தேசிய சேவைக்கு உட்படாததுடன், உரிய அனுமதியின்றி 3 மாதத்துக்கும் அதிகமான காலம் சிங்கப்பூருக்கு வெளியில் தங்கியிருந்ததும் குற்றமாகக் கருதப்படும்.

தேசிய சேவை தொடர்பான அறிவிப்புக் கடிதம் குறித்துத் தாம் அறிந்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், தமக்கு மருத்துவச் சிக்கல்கள் இருந்ததால், பயிற்சியின்போது காயம் ஏற்படலாம் என்று அஞ்சி தேசிய சேவையைப் புறக்கணிக்க முடிவெடுத்ததாக அவர் கூறினார்.


 

Top