Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய சேவை பதிவு மே 22இலிருந்து தொடக்கம்

2002 ஜனவரி மாதம் 2-ஆம் தேதிக்கும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கும் இடையே பிறந்த சிங்கப்பூர் ஆண் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் தேசிய சேவைக்குப் பதிவு செய்ய வேண்டும்.

வாசிப்புநேரம் -
தேசிய சேவை பதிவு மே 22இலிருந்து தொடக்கம்

(படம்: TODAY)

2002 ஜனவரி மாதம் 2-ஆம் தேதிக்கும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கும் இடையே பிறந்த சிங்கப்பூர் ஆண் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் தேசிய சேவைக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இம்மாதம் 22-ஆம் தேதியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இணையம் வழியாக அல்லது 3 டெப்போ ரோட்டில் (Depot Road) அமைந்திருக்கும் மத்திய ஆள்பலத் தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தற்காப்பு அமைச்சு, அறிக்கை ஒன்றில் சொன்னது.

பதிவு செய்வோர், மருத்துவப் பரிசோதனைக்கான தேதியையும் தெரிவு செய்ய வேண்டும்.

சிங்கப்பூரில் படிப்பை முடிப்பதற்கு தேசிய சேவையை ஒத்திவைக்கத் திட்டமிடுவோர் இணையம் மூலமாக அல்லது நேரடியாக அதற்கு விண்ணப்பிக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்