Images
  • Singapore

சிறுமியை மானபங்கம் செய்த முழுநேர தேசியச் சேவையாளருக்கு 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

12 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்த முழுநேர தேசியச் சேவையாளருக்கு 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை அணுகியிருக்கிறார் 18 வயது லெஸ்ட்டர் ஓங்.

தான் எடுக்கவுள்ள படங்களுக்குப் பாவனை செய்யும்படி சிறுமியிடம் கேட்டிருக்கிறார் ஓங்.

சிறுமியும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ஓங் சிறுமியிடம் தகாத விதத்தில் நடந்துகொண்டார்.

அதனைப் பற்றித் தன்னுடைய பெற்றோரிடம் கூறிய சிறுமி பின் ஓங்கைப் பற்றி காவல்துறையிடம் புகார் செய்தார்.

ஓங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைப்படி, தேசியச் சேவைக் கடமைகளைப் பூர்த்தி செய்வதைத் தவிர அவர் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெளியே செல்லக்கூடது.

அதோடு அவர் 120 மணி நேரம் சமூகச் சேவையில் ஈடுபட வேண்டும்.

ஆரோக்கியமான பாலியல் உணர்ச்சிகள், பொறுப்புள்ள பாலியல் நடத்தை பற்றிய மனோவியல் கல்வி வகுப்புகளுக்கும் ஓங் செல்ல வேண்டும்.

நன்னடத்தைக் கண்காணிப்பின் நிபந்தனைகளைக் கடைப்பிடித்தால் ஓங் மீதான குற்றப்பதிவு நீக்கப்படும்.


Top