Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய சேவையாளர்களுக்குப் புதிய வடிவில் தலைக் கவசங்கள்

தேசிய சேவையாளர்களுக்குப் புதிய வடிவில் தலைக் கவசங்கள்

வாசிப்புநேரம் -
தேசிய சேவையாளர்களுக்குப் புதிய வடிவில் தலைக் கவசங்கள்

படம்: MINDEF

போர்க்காலத்தில் ஆக்ககரமாகச் செயல்பட உதவும் புதிய வகை தலைக் கவசங்களை முழு நேர தேசிய சேவையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்

கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து "high-cut" எனும் தலைக் கவசத்தை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தொலைதொடர்புக் கருவிகள், இரவில் பார்க்க உதவும் கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்த ஏதுவாய் புதிய தலைக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சு CNAஇடம் தெரிவித்தது.

அறிவியல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் போர்க்காலத்தில் ஆக்ககரமாகச் செயல்பட உதவும் கருவிகளை வழங்கும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் முயற்சிகளில் அதுவும் ஒன்று என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

ராணுவ வீரர்கள் கனமான எடையைத் தூக்க உதவும் exoskeleton கருவியையும் ஆயுதப் படை சோதித்து வருகிறது.

அமெரிக்க சிறப்புப் படையும் "high-cut" தலைக் கவசத்தைப் பயன்படுத்துகிறது.

குறைந்த எடையில், பல்வேறு கருவிகளை எளிதில் பயன்படுத்தும் வசதிகொண்டது அது என்று அமெரிக்க ராணுவ இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் "high-cut" தலைக் கவசத்தின் விலை சுமார் 1,860 டாலர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்