Images
  • army
    படம்: MINDEF

முழுநேர தேசிய சேவையாளர்களுக்கான வேலை, கல்விக் கண்காட்சி

தேசிய சேவையை முடித்துவிட்டு மேற்படிப்பு அல்லது வேலைக்குத் தயாராகும் 4,000க்கும் அதிகமான முழுநேர தேசிய சேவையாளர்களுக்கான மேம்பட்ட வேலை, கல்விக் கண்காட்சி இன்று தொடங்கிவைக்கப்பட்டது.

70க்கும் அதிகமான நிறுவனங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர் ஊழியரணியால் உருவாக்கப்பட்ட தேசிய சேவையாளர்களுக்கான மின்னிலக்க வேலையைத் தொடங்க உதவும் தொகுப்பும் இன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

வேலை தேடும் தேசிய சேவையாளர்களுக்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களும் திட்டத்தில் அடங்கும்.

தேசிய சேவையாளர்கள் தெளிவான முடிவை எடுக்க வகைசெய்யும் பயிலரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலை தேடும் தேசிய சேவையாளர்களுக்கு உதவும் முயற்சிகளின் ஓர் அங்கமாகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் தற்போதையச் சூழலுக்கும் வருங்காலத்திற்கும் ஏற்ற திறன்களைப் பற்றி அறிந்துகொள்வதற்ககுக் கண்காட்சி வகைசெய்யும் என்றும் திரு. ஹெங் கூறினார்.

மாற்றங்கள் பெரிய அளவில் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவர் சுட்டினார்.

அதற்கு ஏற்றவாறு தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் தேசிய சேவையாளர்களுக்கான வேலை வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்று திரு. ஹெங் குறிப்பிட்டார்.


Top