Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆளுங்கட்சிக்குப் பயந்து வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க அஞ்சத் தேவையில்லை: தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

ஆளுங்கட்சிக்குப் பயந்து, வாக்காளர்கள் எதிர்கட்சிகளுக்கு வாக்களிக்க அஞ்சத் தேவையில்லை என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆளுங்கட்சிக்குப் பயந்து வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க அஞ்சத் தேவையில்லை: தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

(படம்: CNA)

ஆளுங்கட்சிக்குப் பயந்து, வாக்காளர்கள் எதிர்கட்சிகளுக்கு வாக்களிக்க அஞ்சத் தேவையில்லை என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி கூறியுள்ளது.

மாறுதல்கள் அவசியம் என்றும், எதிர்த்தரப்பினர் நாடாளுமன்றத்தில் இன்னும் கூடுதலான கண்காணிப்பை வழங்குவர் என்றும் அது குறிப்பிட்டது.

கட்சியின் தலைமைச் செயலாளர் திரு ஸ்பென்சர் இங் (Spencer Ng), இன்று காலையில் தொகுதி உலா சென்றிருந்த போது அவ்வாறு கூறினார்.

சில அம்சங்களில் கட்சி இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட அவர், சமூக ஊடகத்தில் செயலாற்ற மேலும் தயாராக இருந்திருக்கலாம் என்றார்.

குறிப்பாக COVID-19 நோய்த்தொற்றினால் பிரசார முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டதால் அவை உதவியிருக்கும் என்று திரு. இங் கூறினார்.

இருப்பினும் 2015ஆம் ஆண்டுத் தேர்தலை விட இம்முறை எதிர்க்கட்சிகள் முன்வைத்த திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்