Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கண்ணைக் கவரும் கலைப்படைப்பு

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தை, இப்போது ஒரு புதிய கலைப்படைப்பு அலங்கரிக்கிறது.

வாசிப்புநேரம் -
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கண்ணைக் கவரும் கலைப்படைப்பு

(படம்: NTU)


நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தை, இப்போது ஒரு புதிய கலைப்படைப்பு அலங்கரிக்கிறது.

பார்ப்பதற்கு ஊதா நிற வண்ணத்துப்பூச்சிகள் ஒன்றாகப் பறந்து செல்வதைப் போல் தென்படுகிறது அந்தக் கலைப்படைப்பு.

(படம்: NTU)

4.5 மீட்டர் உயரம் கொண்ட அந்தக் கலைப்படைப்பு 1,200 அலுமினியத் தகடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

காற்றடித்தால் அசையும் என்பது இதன் தனிச்சிறப்பு.

பல்கலைக்கழகத்தின் Arc கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கலைப்படைப்பிற்குப் பெயர் 'Loop'.

முடிவற்ற தொடர்ச்சியைப் பிரதிபலிக்கும் கணிதக் குறியை மனத்திற்கொண்டு அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலை, வடிவமைப்பு, ஊடகக் கல்வி கற்கும் மாணவர்களின் கைவண்ணமும் கூட இந்தக் கலைப்படைப்பில் கலந்துள்ளது.

2017இல் பாடத்துக்காக மாணவர்கள் வடிவமைத்த 'Loop', ஃபேப்ரிஸியோ காலி (Fabrizio Galli) எனும் கலைஞரின் கண்காணிப்பில் உருவம் கண்டுள்ளது.

(படம்: NTU)

அதனை உருவாக்க, பள்ளியின் முன்னாள் உறுப்பினர்கள் 100,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் இருக்கும் 50க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளுடன் இணைகிறது 'Loop'.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்