Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு எளிதில் கெட்டுப்போகாமல் வைத்திருக்க இயற்கையான வழி கண்டுபிடிப்பு

உணவை அதிக காலம் கெட்டுப்போகாமல் வைத்திருப்பது இனி சாத்தியமாகக்கூடும்.

வாசிப்புநேரம் -
உணவு எளிதில் கெட்டுப்போகாமல் வைத்திருக்க இயற்கையான வழி கண்டுபிடிப்பு

(படம்: NTU)

உணவை அதிக காலம் கெட்டுப்போகாமல் வைத்திருப்பது இனி சாத்தியமாகக்கூடும்.

ஈராண்டு நீடித்த ஆய்வின் மூலம் இயற்கையாகப் பதப்படுத்தும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்களைக் காட்டிலும் அது 8 மடங்கு கூடுதலான நேரம் உணவு கெட்டுப்போகாமல் வைத்திருக்க உதவுகிறது.

நன்யாங் தொழில்நுட்ப பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர் குழு இயற்கையாகப் பதப்படுத்தும் பொருளைக் கண்டுபிடித்துள்ளது.

ரொட்டியைப் புளிக்க வைக்கும் Yeastஇல் செடிகளில் காணப்படும் மரபணுக்களைப் புகுத்தியதன் மூலம் அது கிட்டியது.

பதப்படுத்தும் பொருளால் உணவை அதிக காலம் கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடிகிறதா என்பதும் சோதிக்கப்பட்டது.

இறைச்சி சராசரியாக 6 மணி நேரத்திற்குள் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.

ஆனால், இறைச்சியை 2 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் வைத்திருக்க வகை செய்கிறது இயற்கையான பதப்படுத்தும்பொருள்.

அடுத்த ஈராண்டுக்குள், இயற்கையான பதப்படுத்தும் பொருளை சந்தைப்படுத்த பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆய்வுக்குழு பேச்சு நடத்தி வருகிறது.

உணவு உற்பத்தியாளர்களிடமும், பயனீட்டாளர்களிடமும் இயற்கையான பதப்படுத்தும் பொருளுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் என்ன சேர்க்கப்படுகிறது என்பதில் அதிகமானோர் அக்கறை செலுத்துவது அதற்குக் காரணம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்