Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாதுகாப்பான, மலிவான சைக்கிள் தலைக்கவசத்தை உருவாக்கியுள்ள NTU ஆய்வாளர்கள்

பாதுகாப்பான, மலிவான சைக்கிள் தலைக்கவசத்தை உருவாக்கியுள்ள NTU ஆய்வாளர்கள்

வாசிப்புநேரம் -
பாதுகாப்பான, மலிவான சைக்கிள் தலைக்கவசத்தை உருவாக்கியுள்ள NTU ஆய்வாளர்கள்

படம்: NTU

சைக்கிளோட்டிகளுக்குக் கடுமையான காயம் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் மலிவான தலைக்கவசத்தை (helmet), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அந்தத் தலைக்கவசம், புதிய பிளாஸ்டிக் பொருளால் உருவாக்கப்பட்டது.

அதை உற்பத்தி செய்வது எளிது.

மேலும் அது, உயர்தரத் தலைக்கவசம் வழங்கும் பாதுகாப்பை, நடுத்தர விலையில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தலைக்கவசத்தின் தொடக்கமாதிரியை NTU-இன் இயந்திர, விண்வெளித் துறைப் பள்ளியின் துணைப் பேராசிரியர் லியோங் கா ஃபாய் (Leong Kah Fai) வழிநடத்தும் குழு உருவாக்கியது.

குழுவில் திரு. கோரம் கோஹெல் (Goram Gohel), திரு. பூடோலியா சோமென் குமார் (Bhudolia Somen Kumar) உள்ளிட்ட ஆய்வாளர்களும் உள்ளனர்.

அந்த தலைக்கவசம், விபத்துக்களின்போது உருவாகும் அதிர்ச்சியை மேம்பட்ட வகையில் தாங்கிப் பாதுகாப்பு வழங்கும் ஆற்றல் படைத்தது.

விபத்து நேர்ந்தால், சைக்கிளோட்டியின் தலைக்கு ஏற்படும் தாக்கத்தை அது பெருமளவு குறைக்கிறது.

விபத்துகளால் கடுமையான தலைக்காயமும் மரணமும் நேரும் விகிதத்தைத் தலைக்கவசங்கள், கணிசமாகக் குறைக்கின்றன என்பது பல்வேறு ஆய்வுகளில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்