Images
  • NTU License
    (படம்: TODAY)

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 2 உணவக உரிமங்கள் தற்காலிக ரத்து


நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் Long John Silver’s, The House Steamboat உணவகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் இரு உணவகங்களும் 12 குற்றப்புள்ளிகளைப் பெற்றன.

- Long John Silver’s உணவில் அந்நியப் பொருளைக் கலந்தது (6 குற்றப்புள்ளிகள்), உதவியாளரைச் சிங்கப்பூர் உணவு அமைப்புடன் பதிவு செய்திராதது (6 குற்றப்புள்ளிகள்).

- The House Steamboat Restaurant உணவைத் தரையில் வைத்துத் தயாரித்தது (6 குற்றப்புள்ளிகள்), உதவியாளரைப் பதிவு செய்திராதது (6 குற்றப்புள்ளிகள்).

இரு உணவகங்களின் உரிமங்களும் 2 வாரங்களுக்கு ரத்துச் செய்யப்படும். உணவகங்கள் 800 வெள்ளி அபராதமும் செலுத்தவேண்டியிருக்கும்.

- Long John Silver’s-ன் உரிமம் ஜூன் 4 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ரத்து

- The House Steamboat உணவகத்தின் உரிமம் ஜூன் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ரத்து

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உணவகங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துளளது.

அனைத்து உணவகங்களின் மீதும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு உணவுச் சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தவிருப்பதாகப் பல்கலைக்கழகம் கூறியது. 

Top