Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Parkinson's நோயாளிகளுக்கு உதவக்கூடிய புதிய மாத்திரையை உருவாக்கியுள்ள NTU

Parkinson's நோயாளிகளுக்கு உதவக்கூடிய புதிய மாத்திரையை உருவாக்கியுள்ள NTU 

வாசிப்புநேரம் -

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பார்க்கின்சன்ஸ் (Parkinson's) நோயாளிகளுக்கு உதவக்கூடிய புதிய மாத்திரை ஒன்றை உருவாக்கியுள்ளது.

நோயாளிகள் தற்போது உட்கொள்ளும் 6 மாத்திரைகளுக்குப் பதில் அந்த ஒரு மாத்திரையை உட்கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Microencapsulation எனப்படும் முறையைக் கொண்டு மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.

Parkinson's நோயாளிகளால் அதிகம் உட்கொள்ளப்படும் Levodopa மருந்தும், மற்ற பொருள்களும் மருந்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மருந்தை உட்கொண்டவுடன் அது வயிற்றுக்குள் மிதந்தவாறு 24 மணிநேரத்திற்குத் தொடர்ந்து செயல்படும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

புதிய மருந்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் நோயாளிகளிடையே சோதனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்