Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓய்வுபெறும் வயது, மறுவேலை வாய்ப்பு வயதை உயர்த்துகிறது NTUC

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், தனது ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதையும் மறுவேலை வாய்ப்பு வயதையும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஓய்வுபெறும் வயது, மறுவேலை வாய்ப்பு வயதை உயர்த்துகிறது NTUC

(படம்: MCI)

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், தனது ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதையும் மறுவேலை வாய்ப்பு வயதையும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அது, அரசாங்கம் பரிந்துரைத்துள்ள காலத்துக்கு, ஒன்றரை ஆண்டு முன்கூட்டியே நடப்புக்கு வருவதைக் குறிக்கிறது.

சிங்கப்பூரில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 2022இல் 62இலிருந்து 63க்கு உயர்த்தப்படும் என்று இவ்வாண்டின் தேசிய தினக் கூட்ட உரையின்போது பிரதமர் லீ சியென் லூங் கூறியிருந்தார்.

அதோடு ஓய்வுபெற்ற ஊழியர்கள் மறுவேலை வாய்ப்புக்குத் தகுதிபெறும் வயது 2022இல் 67இலிருந்து 68க்கு உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 2030க்குள் அந்த வயது வரம்பு 70க்கு அதிகரிக்கப்படும்.

அந்த மாற்றங்கள் அதிகாரபூர்வமாக நடப்புக்கு வருவதற்கு ஒன்றரை ஆண்டு முன்னதாகவே, சொந்தமாக அவற்றை நடப்புக்குக் கொண்டுவருகிறது, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்.

2021 ஜனவரியில் அமைப்பின் நிர்வாக, ஆய்வுப் பிரிவில் மாற்றங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படும்.

பின்னர், 2021 ஜூலையிலிருந்து தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த 12 சமூக நிறுவனங்களிலும் மாற்றங்கள் நடப்புக்குவரும்.

ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் சுமார் 430 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மறுவேலை வாய்ப்பு வயதை உயர்த்துவதால் சுமார் 280 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அது குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்