Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடிநீரில் இருக்கும் அடர்ந்த உலோகங்களின் அளவைக் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு

குடிநீரில் இருக்கும் அடர்ந்த உலோகங்களின் அளவைக் கண்டறியும் கருவி ஒன்றை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
குடிநீரில் இருக்கும் அடர்ந்த உலோகங்களின் அளவைக் கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு

படம்: NTU Singapore

குடிநீரில் இருக்கும் அடர்ந்த உலோகங்களின் அளவைக் கண்டறியும் கருவி ஒன்றை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வழக்கமாகக் குடிநீரின் தரத்தை மதிப்பிடும் ஆய்வுக்கூடச் சோதனைகளின் முடிவுகள் வெளிவர ஒரு நாளாவது எடுக்கும்.

அடர்ந்த உலோகங்களின் அளவை நிறம், வாசனை, சுவை ஆகியவை கொண்டு கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவி, நீர் எடுக்கும் தளத்திலிருந்தவாறே சோதனைகளைச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

சில துளிகளைக் கொண்டு சோதனைகளை நடத்தி, நீரில் இருக்கும் 24 வித உலோக நச்சுகளைக் கண்டறிய முடியும் என்று அது குறிப்பிட்டது.

குடிநீரின் தரத்தைச் சோதனை செய்யும் கருவிகளை விற்பதற்காக Waterply என்ற நிறுவனத்தை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் குழு அமைத்திருக்கிறது.

அந்த நிறுவனம் சீனாவுடன் சேர்ந்து நீர்த் தூய்மைக்கேட்டைத் தடுக்க அடுத்த தலைமுறைச் சோதனைக் கருவிகளை உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்