Images
  • NTU License
    (படம்: TODAY)

150 மருத்துவ மாணவர்களை வரவேற்ற NTU

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 150 மருத்துவ மாணவர்களை இன்று வரவேற்றது.

அது மிகப்பெரிய மாணவர் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை 138 ஆக இருந்தது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 2013-இல் மருத்துவப் பட்டக்கல்வியைத் தொடங்கியது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி, மருத்துவத்துறையில் அடியெடுத்து வைத்ததைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

இந்த ஆண்டு, லீ கொங் சியன் (Lee Kong Chian) மருத்துவப்பள்ளி 900க்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றது.
 

Top