Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுயதொழில் செய்பவர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லக் கூடுதலாக $4 மில்லியன்: தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்

சுயதொழில் செய்பவர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லக் கூடுதலாக $4 மில்லியன்: தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்

வாசிப்புநேரம் -
சுயதொழில் செய்பவர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லக் கூடுதலாக $4 மில்லியன்: தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்

கோப்புப் படம்

சுயதொழில் செய்பவர்கள் மேலும் பயிற்சிகள் பெறுவதற்கு, கூடுதலாக 4 மில்லியன் வெள்ளியை தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வழங்கவுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் அரசாங்கம் ஏற்கனவே 36 மில்லியன் வெள்ளியை அதற்கு ஒதுக்கியது.

அதனையும் சேர்த்து, சுயதொழில் செய்வோருக்கான பயிற்சி உதவிக்கு மொத்தம் 40 மில்லியன் வெள்ளி கிட்டியுள்ளது.

சுயதொழில் செய்பவர்களுக்காக நாலாயிரத்துக்கும் அதிகமான பயிற்சிகள் உள்ளன.

சில துறைகள் சார்ந்த பயிற்சிகள் நாளடைவில் தொடங்கப்படும்.

அந்த 40 மில்லியன் வெள்ளி படித்தொகையை மூன்று மாதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதனால் சுயதொழில் செய்பவர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதை ஊக்குவிக்கவும், தேவையுள்ள துறைகளில் தற்காலிக வேலைகளில் சேர்வது குறித்துப் பரிசீலிக்கவும் அது உதவும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்