Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புது சந்தாத் திட்டம் - NTUC FairPrice, Grab கழிவுகள்

சிங்கப்பூர்: NTUC FairPrice, Grab நிறுவனங்கள் இணைந்து புதிய சந்தாத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளன.

வாசிப்புநேரம் -
புது சந்தாத் திட்டம் - NTUC FairPrice, Grab கழிவுகள்

(படம்: NTUC FairPrice and Grab)


சிங்கப்பூர்: NTUC FairPrice, Grab நிறுவனங்கள் இணைந்து புதிய சந்தாத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளன.

ஆண்டுக் கட்டணம் செலுத்தி திட்டத்தில் சேருவோருக்கு
வெவ்வேறு கழிவுகள் வழங்கப்படும்.

திட்டத்தின் பெயர் SCORE.

NTUC பேரங்காடிகளிலும் Unity கடைகளிலும் ஒரேதடவையாக $100க்கு மேல் செலவிடுவோருக்குக் கட்டங்கட்டமாக 5% கழிவு வழங்கப்படும்.

அதோடு இணையத்தின் மூலம் NTUC பேரங்காடிகளிலிருந்து பொருட்கள் வாங்கும் உறுப்பினர்களுக்கு, மாதம் ஒருமுறை பொருட்கள் இலவசமாக வீட்டில் சேர்க்கப்படும்.

அதேபோல், Grab சேவையைப் பயன்படுத்துவோருக்கும் வெவ்வேறு கழிவுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, ஒரு மாதத்தில் 4 முறை முழுப் பயணக் கட்டணத்தைச் செலுத்தியபின் மேற்கொள்ளும் எல்லாப் பயணங்களின்போதும்
20% கழிவு வழங்கப்படும்.

திட்டத்தில் சேர விரும்புவோர், முதல் ஆண்டு $29.99 கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டாம் ஆண்டிலிருந்து கட்டணம் $49.99யாக உயரும்.

மே 18க்குள் திட்டத்தில் சேர்ந்தால், $18 செலுத்தினால் போதும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்