Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் 1,000க்கு மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைக்கத் திட்டம்

தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் அடுத்த ஆண்டிற்குள் 1,000க்கு மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் 1,000க்கு மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைக்கத் திட்டம்

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் அடுத்த ஆண்டிற்குள் 1,000க்கு மேற்பட்ட நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

அந்த எண்ணிக்கை முன்பு அது வைத்திருந்த இலக்கைக் காட்டிலும் அதிகம்.

நிறுவனப் பயிற்சிக் குழுக்கள், தொழிற்சங்கங்களையும் முதலாளிகளையும் இணைத்து ஊழியர்களின் பயிற்சிகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய உதவும்.

சுமார் இரண்டரை ஆண்டிற்குமுன் தொடங்கப்பட்ட திட்டத்தின்கீழ் 781 குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

Certact Engineering நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையைத் திறந்துவைத்த தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) அதனை அறிவித்தார்.

காங்கிரஸின் வேலைப் பாதுகாப்பு மன்றத்தால் கடந்த 7 மாதங்களில் 9,000க்கும் அதிகமான ஊழியர்களுக்குப் புதிய வேலைகள் கிடைத்ததாக அவர் சொன்னார்.

வேலையை இழக்கும் ஆபத்தில் உள்ளவர்கள் அல்லது ஆள்குறைப்பிற்கு ஆளானவர்களுக்கு உதவுவதற்காகச் சென்ற பிப்ரவரி மாதம் மன்றம் அமைக்கப்பட்டது.

அந்தத் திட்டத்தால் Certact Engineering நிறுவனத்தின் மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சினை சமாளிக்கப்பட்டது.

நிறுவனத்தின் வருவாயும் ஒரு மடங்கு அதிகரித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்