Images
  • NTUC Items
    (படம்: NTUC FairPrice)

NTUC FairPriceஇல் வீட்டுக்குப் பயன்படுத்தப்படும் 300 புதிய பொருள்களை அறிமுகப்படுத்த திட்டம்

NTUC FairPrice பேரங்காடி தனது சொந்தப் பெயரில் 300 புதிய பொருள்களை அறிமுகம் செய்யவிருக்கிறது.

அடுத்த ஓராண்டிற்குள் அவற்றை அறிமுகப்படுத்த பேரங்காடி திட்டமிட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக அனைத்து FairPrice பேரங்காடிகளிலும் இன்று முதல் புதிய பொருள்கள் கிடைக்கும்.

FairPrice பேரங்காடி நடத்திய ஆய்வில், வாடிக்கையாளர்கள் FairPrice பொருள்கள் நல்ல தரத்தைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

மற்ற இடங்களோடு ஒப்பிடும்போது விலையும் கட்டுப்படியானதாய் இருப்பதாகக் கூறப்பட்டது.

சுமார் 55 நாடுகளிலிருந்து FairPrice பொருள்கள் இறக்குமதியாவதோடு உலகளவில் உணவுப் பாதுகாப்புத் தர மதிப்பீட்டின்கீழ் அவை அங்கீகரிக்கப்படுகின்றன.

FairPrice பேரங்காடிப் பொருள்களின் விலை மற்ற பொருள்களைவிட 10-லிருந்து 20 விழுக்காடு வரை விலை குறைவாக விற்கப்படுகின்றன.

மேலும், வாடிக்கையாளர்களுடைய தேவைக்கேற்பவும் விருப்பத்துக்கேற்பவும் அதிகத் தரமான பொருள்களை உற்பத்தி செய்ய முடிவதாக NTUC FairPrice நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பொருள் உற்பத்தி செய்யும் பிரிவின் துணைத் தலைவருமான கிரேஸ் சுவா (Grace Chua) கூறியிருக்கிறார்.
 

Top