Images
  • people stock

ஊழியர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளுக்காக நிறுவனங்கள் பெறும் மானியத்தை விரிவுபடுத்த கோரிக்கை

விருப்பத்துக்கு ஏற்ப வேலை
செய்பவர்களும் சுயதொழில் செய்பவர்களும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதை ஊக்குவிக்க, அரசாங்க மானியம் வழங்கப்படவேண்டுமெனத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே (Patrick Tay) கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை வரவுசெலவுத் திட்டம் 2020 அறிவிக்கப்படவிருப்பதை முன்னிட்டு, திரு. டே Facebook-இல் அதனைப் பதிவிட்டார்.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மீது முதலீடு செய்ய, அரசாங்கம் வழங்கும் மானியத்தை மேம்படுத்துவதற்கு வரவுசெலவுத் திட்டம் வகைசெய்யும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

விருப்பத்துக்கேற்ப வேலை செய்பவர்களும், சுயதொழில் செய்பவர்களும் மானியத்தைப் பெறும்படி, திட்டம் விரிவு
படுத்தப்படவேண்டும் என்று திரு. டே கேட்டுக்கொண்டார்.

அதைச் செயல்படுத்துவதற்கு, அரசாங்கத்துடன் துணைநிற்க, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தயார் என்று அவர் தெரிவித்தார்.

Top