Images
  • Nurse Collage
    (படம்: Singapore General Hospital, Ng Teng Fong General Hospital, National University Polyclinics)

"தாதியர் என்பது வேலை அல்ல...சேவை..."; விருது வாங்கிய 4 தாதியர்களின் பயணம்

சிங்கப்பூரில் அண்மையில், "தாதியர் மெச்சத்தக்க சேவை விருது" 100 தாதியர்களுக்கு வழங்கப்பட்டது.

விருது வாங்கிய தாதியர் நால்வர் 'செய்தி'யின் நேர்காணலில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

தாதிமைத் துறையில் உங்களை எப்படி வேறுபடுத்திக் கொண்டீர்கள்?

(படம்: Singapore General Hospital)


இந்த விருது சிங்கப்பூரின் அனைத்துத் தாதியர்களையும் சேரும். எல்லோருக்கும் அர்ப்பணிப்புடனும் உண்மையாகவும் சேவையாற்ற வேண்டும் என்பது நாங்கள் கற்றுக்கொண்ட பாடம்.

- சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் பணியாற்றும் குமாரி நந்தகுமாரி குணசேகரன்

என் வேலையில் திருப்தி அடையும்வரை எனது கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். மேலும், என்னால் முடிந்த வரை நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் சேவை அளிப்பேன்.

- சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் பணியாற்றும் குமாரி ராஜசுலச்சனா ராஜாராம்

நான் செய்வதை ஆகச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். ஏதேனும் பிரச்சினை என்றால், அதை உடனடியாகச் சரிசெய்ய முயல்வேன்.

- தேசியப் பல்கலைக்கழக பலதுறை மருந்தகத்தில் பணியாற்றும் குமாரி லெட்சுமி முத்துசாமி

தாதியர்கள் அனைவருமே தங்கள் வேலையில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். நான் தைப்பூசம், சுகாதார விழாக்கள் எனப் பலவற்றில் கலந்துகொண்டு நம் இந்தியச் சமூகத்திற்குத் தொண்டூழியம் செய்வேன்.

- இங் தெங் ஃபொங் பொது மருத்துவமனையில் பணியாற்றும் குமாரி ஹேமா மாலினி


COVID-19 நோய்த்தொற்றை எதிர்கொள்ள உங்களை மனரீதியாக எப்படி தயார்ப் படுத்திக்கொண்டீர்கள்?

(படம்: National University Polyclinics)


என்னைத் தயார்ப் படுத்திக்கொள்வதற்கும் மற்ற தாதியர்களைச் சரியாக வழிநடத்துவதற்குமான தைரியத்தை 43 ஆண்டு அனுபவம் எனக்குத் தந்தது.


- குமாரி லெட்சுமி

நான் SARS கிருமித்தொற்றின் போதும் தாதியாகப் பணியாற்றினேன். அப்போது கிடைத்த அனுபவம் நிதானமாகவும் நேர்மறையாகவும் இருக்க உதவுகிறது

- குமாரி ஹேமா


விருதுகள், பாராட்டுகள் உங்களுக்கு ஊக்கமளிக்கின்றனவா?

(படம்: Singapore General Hospital)


பாராட்டுகளும் பரிசுகளும் கண்டிப்பாக ஊக்குவிக்கின்றன. இது என் உழைப்புக்குக் கிடைத்த பரிசாக நான் கருதுகிறேன். என் பணியில் இன்னும் அதிக ஈடுபாடு காட்டுவேன்

- குமாரி ராஜசுலச்சனா


விருதுகள் என்னுடைய கடின உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம். இருந்தும், ஒவ்வொரு விருதுக்குப் பின்னும், கண்ணுக்குப் புலப்படாத பல உதவிக் கரங்களின் பங்கு இருக்கிறது

- குமாரி நந்தகுமாரி


COVID-19 நோய்த்தொற்றை எண்ணி பயந்தது உண்டா?

(படம்: Ng Teng Fong General Hospital)


நாம் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும் வரை நோய்த்தொற்றை எண்ணி அஞ்சுவதற்குக் காரணம் இல்லை

- குமாரி ஹேமா

கண்டிப்பாகப் பயம் இருக்கின்றது. ஆனால், இந்தக் கிருமித்தொற்றை எதிர்கொள்வதில் நமது அரசாங்கம் மீதும் மருத்துவமனை மீதும் உள்ள நம்பிக்கை பயத்தைக் குறைத்துள்ளது.

- குமாரி ராஜசுலச்சனா


தாதிமைத் துறையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?

(படம்: Singapore General Hospital)தாதிமைத் துறைதான் எனக்கு ஏற்றது என்று என் குடும்பத்தினர் ஊக்குவித்தனர். அவர்கள் ஆலோசனையைப் பின்பற்றியதில் எனக்கு இன்றுவரை எந்த வருத்தமும் இல்லை

- குமாரி நந்தகுமாரி

எனக்குச் சிறு வயதிலிருந்தே பிறருக்கு உதவுவது பிடிக்கும். இருந்தும், ஒரு நோயாளி குணமாகிச் செல்லும்போது, அவர் கூறுகிற நன்றியும் அவர் முகத்தில் உள்ள புன்னகையும் தான் இவ்வளவு காலம் இத்துறையில் பணியாற்ற உதவியது.

- குமாரி லெட்சுமி


தாதியராக விரும்புவோருக்கு உங்கள் அறிவுரை?

நம் அன்புக்குரியவர்களைப் பார்த்துக்கொள்வது போல் நோயாளிகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும்

- குமாரி லெட்சுமி

தாதியர் வேலையில் அன்பும் அரவணைப்பும் மிகவும் முக்கியம். ஈடுபாட்டோடு மனதாரச் சேவையாற்ற வேண்டும்.

 -குமாரி ஹேமா

Top