Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாதிமைத் துறையில் சேர இதுவரையில்லாத அளவில் மாணவர்கள் ஆர்வம்

முதல் முறையாக, சுகாதார நிபுணத்துவ மாற்றுத் திட்டத்தின்கீழ், இடைநிலைப் பணிமாற்றம் செய்யும் 34 மூத்த மாணவர்கள் அந்தத் துறையில் பயிலவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தாதிமைத் துறையில் சேர இதுவரையில்லாத அளவில் மாணவர்கள் ஆர்வம்

(படம்: ஹாஜரா பிவி திப்பு சுல்தான்)

தாதிமைத் துறையில் சேர்வதற்கு கூடுதலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

சிங்கப்பூரில் அந்தத் துறையில் பட்டக் கல்வி வழங்கிவரும் ஒரே பல்கலை தேசியப் பல்கலைக் கழகம்.

இவ்வாண்டு, அதன் தாதிமைத் துறையில் பயில இதுவரையில்லாத அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

முதல் முறையாக, சுகாதார நிபுணத்துவ மாற்றுத் திட்டத்தின்கீழ், இடைநிலைப் பணிமாற்றம் செய்யும் 34 மூத்த மாணவர்கள் அந்தத் துறையில் பயிலவுள்ளனர்.

நிதி, இராணுவம் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த அவர்கள் தாதிமைத் துறையில் இப்போது சேர்ந்துள்ளனர்.

சுகாதார நிபுணத்துவ மாற்றுத் திட்டத்தில் அண்மையில் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

அவர்களுக்கு மாதா மாதம் உதவித் தொகையும் வழங்கப்படும்.

இளம் சிங்கப்பூரர்களும் தாதிமைத் துறையில் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாண்டில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கக் கல்லூரி மாணவர்களும், பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதனால், கடந்த மூவாண்டுகளில் அந்தத் துறைக்குச் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பல்கலை இரட்டிப்பாக்கியுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்