Images
  • NUS
    (கோப்புப் படம்: NUS)

செயற்கைக் கை, கால்களில் தொடு உணர்வைப் பெற உதவும் NUS ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கைத் தோல்

செயற்கைக் கை, கால்களைக் கொண்டவர்களும் இனி, தொடு உணர்வைப் பெறக்கூடும்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கைத் தோல் அதைச் சாத்தியமாக்கும்.

பிரபல “Star Wars” திரைப்படம், அந்தக் கண்டுபிடிப்புக்கு ஊக்கமளித்ததாக, ஆய்வாளர்கள் கூறினர்.

படத்தில் லியூக் ஸ்கைவாக்கர் (Luke Skywalker) எனும் கதாபாத்திரத்தின் வலது கை, செயற்கைக் கையாக மாறும்போது அதற்கு மீண்டும் தொடு உணர்வு உருவாகும்.

அதைப்போல, செயற்கைக் கை, கால்களைக் கொண்டவர்கள் அனைவரும் மீண்டும் தொடு உணர்வு பெற உதவுவது ஆய்வாளர்களின் நோக்கம்.

இந்த மின்-தோலில் சுமார் 100 சிறிய உணர்கருவிகள் உள்ளன.

இதை உருவாக்க, ஆய்வாளர்களுக்குச் சுமார் 2 ஆண்டுகள் பிடித்தன.

பொருள்களின் வடிவத்தையும், அவற்றின் இயல்பையும் 10 மில்லி விநாடிகளில் இதனால் அடையாளம் காண முடிகிறது.

அது கண் சிமிட்டும் நேரத்தைவிடக் குறைவு.

மின்-தோல் தொடர்பான முன்னோட்டச் சோதனையை, அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு ஆய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. 

Top