Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை முதல் ஓட்டுநர் இல்லாப் பேருந்துச் சேவை

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில், ஓட்டுநர் இல்லாப் பேருந்துச் சேவை நாளை முதல் தொடங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை முதல் ஓட்டுநர் இல்லாப் பேருந்துச் சேவை

(படம்: ComfortDelGro)

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில், ஓட்டுநர் இல்லாப் பேருந்துச் சேவை நாளை முதல் தொடங்கவிருக்கிறது.

சேவை ஓராண்டு காலம் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஒன்றரை மாதச் சாலைச் சோதனைக்குப் பிறகு NUSmart Shuttle என்றழைக்கப்படும் அந்தப் பேருந்து, பயணிகளை ஏற்றவிருக்கிறது.

Comfort DelGro, Inch-cape Singapore, EasyMile ஆகிய நிறுவனங்களும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து அது குறித்து அறிவித்தன.

12 பேர் வரை ஏற்றிச் செல்லக்கூடிய அந்தப் பேருந்து கெண்ட் ரிட்ஜ் (Kent Ridge) வளாகத்தில் சேவையாற்றும்.

சக்கர நாற்காலியை ஏற்றும் சறுக்குப் பாதை, அதை நிறுத்துவதற்கான இடம் ஆகியவையும் பேருந்தில் உண்டு.

இலவச NUSmart Shuttle, தற்போது மழையில்லாத வாரநாட்களில் மட்டும் சேவை வழங்கும்.

ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதை ஒன்றைப் பயன்படுத்தும் பேருந்து, சாலைகளில் இருக்கும் தடைகளைக் கண்டறிய சிறப்பு உணர்கருவிகளைக் கொண்டிருக்கும்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்