Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

NUS-இல் புதிதாகச் சேரும் மாணவர்கள் அனைவரும், சேவை தொடர்பான புதிய பாடத் திட்டம் ஒன்றை மேற்கொள்வது கட்டாயம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேரும் மாணவர்கள் அனைவரும், சேவை தொடர்பான புதிய பாடத் திட்டம் ஒன்றை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேரும் மாணவர்கள் அனைவரும், சேவை தொடர்பான புதிய பாடத் திட்டம் ஒன்றை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், முழுமையான கற்றல் அனுபவத்தைப் பெறும் முயற்சியின் ஒரு பகுதி அது.

பல்கலையின் புதிய கல்வி ஆண்டில் சுமார் 7,000 மாணவர்கள், திட்ட நிர்வாகம் போன்ற சமூகச் சேவைத் திறன்களைக் கற்றுக்கொள்வர்.

அவர்கள் ஏற்கனவே நடப்பில் இருக்கும் சமூக இணைப்புத் திட்டங்களில் பங்கு பெறுவர்.

அல்லது பருவநிலை மாற்றத்தைக் கையாள்வது, வசதி குறைந்த குடும்பங்களில் உள்ளோருக்கு உதவுது போன்ற சொந்தத் திட்டங்களையும் அவர்கள் உருவாக்கலாம்.

மேலும், புதிய கல்வி ஆண்டில் பொறியியல் துறையிலும் வடிவமைப்பு, சுற்றுப்புறத் துறையிலும் சேரும் மாணவர்கள் இரு துறைகள் குறித்த அறிவையும் திறன்களையும் ஒருங்கிணைக்கும் பொதுவான பாடத் திட்டத்தைப் பயில்வர்.

அதன் மூலம், 1,500க்கும் அதிகமான பொறியியல் மாணவர்களும் வடிவமைப்பு, சுற்றுப்புறத் துறையைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்களும் பயனடைவர்.

அவர்கள், நீடித்த நிலைத்தன்மையிலும் தொடர்புத் துறையிலும் கூடுதல் கவனம் செலுத்தும் துறைகளுக்கு இடையிலான பாடங்களையும் பயில்வர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்