Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நண்டு, இறால் ஓடுகளிலிருந்து சத்தான துணை உணவுப் பொருள், மருந்துகள் தயாரித்துள்ள சிங்கப்பூர் ஆய்வாளர்கள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்,  நண்டு, இறால் போன்றவற்றின்  ஓடுகளில் இருந்து ஊட்டச் சத்து மிக்க துணை உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் தயாரிப்பதில் வெற்றிகண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், நண்டு, இறால் போன்றவற்றின் ஓடுகளில் இருந்து ஊட்டச் சத்து மிக்க துணை உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் தயாரிப்பதில் வெற்றிகண்டுள்ளனர்.

அந்த முறை ஒடிந்து விழும் மரக்கிளைகளுக்கும் பொருந்தும்.

பார்க்கின்ஸன்ஸ் (Parkinson's) நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்தை அவற்றிலிருந்து தயாரிக்கும் வழிமுறையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அழகுச் சிகிச்சைக்குப் பயன்படும் "collagen" எனப்படும் புரதத்தையும் அதிலிருந்து தயாரிக்கலாம்.

ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் சுமார் 8 மில்லியன் டன் அளவில், நண்டு,இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகள் உணவுக் கழிவுகளாக வீசப்படுகின்றன.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு மரங்களைச் சீர்படுத்தும்போது விழுந்த குப்பைகள், மரப் பட்டறைகளில் சிதறிய மரத்தூள் ஆகியவற்றின் மொத்த அளவு 438ஆயிரம் டன்.

அத்தகையவற்றை மறுபயனீடு செய்வதன் மூலம் குப்பை நிரப்புமிடத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதைக் குறைக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்