Images
  • NUS Implementation
    (படம்:  CNA)

பாலியல் ஒழுங்கீனம் தொடர்பான மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த NUS திட்டம்


பாலியல் ஒழுங்கீனம் தொடர்பான மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் மாணவி மோனிக்கா பே (Monica Baey) குளிக்கும் போது, மற்றொரு மாணவர் அவரைப் படமெடுத்தார்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் புரிந்தவருக்கு மேலும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென அந்த மாணவி சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அது, குற்றச்செயலின் கடுமைக்கேற்ற தண்டனை குறித்துத் தனது பரிந்துரைகளை வழங்கியது. பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு அந்தப் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டது.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் 39,000 மாணவர்கள், 12,000 ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய பரிந்துரைகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.  

Top