Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியாவின் மூன்றாவது ஆகச் சிறந்த பல்கலை NUS

Times Higher Education சஞ்சிகையின் உலகப் பல்கலைக்கழகங்களுக்கான வருடாந்தரத் தரநிலைப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆசியாவின் மூன்றாவது ஆகச் சிறந்த பல்கலை NUS

படம்: Alif Amsyar

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Times Higher Education சஞ்சிகையின் உலகப் பல்கலைக்கழகங்களுக்கான வருடாந்தரத் தரநிலைப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலையும், மூன்றாம் இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலையும் உள்ளன.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், இம்முறை 25ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

அது ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து 2 நிலைகள் இறங்கியிருக்கிறது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், மூன்று நிலைகள் முன்னேறி, 48ஆவது இடத்தைப் பிடித்தது.

அந்தப் பல்கலைக்கழகம், கற்றல், ஆய்வு அம்சங்களில் இம்முறை கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஆசியா

முதலிடம் - சீனாவின் சிங் ஹுவா (Tsing-hua) பல்கலை
இரண்டாம் இடம் - சீனாவின் பெக்கிங் பல்கலை
மூன்றாம் இடம் - சிங்கப்பூர்த் தேசியப் பல்கலை

92 நாடுகளின் சுமார் 1,400 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்