Images
  • ntu nus

NUS, NTU உலகப் பல்கலைக்கழகங்கள் தரப் பட்டியலில் 11ஆம் இடம்

சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முத்திரை பதித்துவருகின்றன.

இன்று வெளியிடப்பட்ட QS உலகப் பல்கலைக்கழகத் தரப் பட்டியல் அடுத்த சில ஆண்டுகளில் அவை பட்டியலின் முதல் பத்து இடங்களில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதைக் காட்டியது.

2020க்கான பட்டியலில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 11ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அது அந்த இடத்தை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் 11ஆம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஆக உயர்ந்த நிலையில் உள்ள பல்கலைக்கழகங்களாக அவை இரண்டும் திகழ்கின்றன.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் 23 இடங்கள் முன்னேறியுள்ளது.

500ஆம் இடத்தில் இருந்த அந்தப் பல்கலைக்கழகம் தற்போது 477ஆம் இடத்தில் உள்ளது.

உலகளாவிய உயர்கல்வி ஆலோசனை நிறுவனமான Quacquarelli Symonds அந்தத் தரப் பட்டியலை வெளியிடுகிறது.

உலகின் ஆயிரம் முன்னணிப் பல்கலைக்கழகங்களை அது தரவரிசைப்படுத்துகிறது.

தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக மசாச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விநிலையம் வந்துள்ளது.  

Top