Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கீறல் விழும்போது தன்னைத் தானே சரிப்படுத்திக்கொள்ளும் மின்னிலக்கத் திரைகளை உருவாக்கியுள்ள NUS ஆய்வாளர்கள்

கீறல் விழும்போது தன்னைத் தானே சரிப்படுத்திக்கொள்ளும் மின்னிலக்கத் திரைகளை உருவாக்கியுள்ள NUS ஆய்வாளர்கள்

வாசிப்புநேரம் -

தேசியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கீறல் விழும்போது தன்னைத் தானே சரிப்படுத்திக்கொள்ளும் மின்னிலக்கத் திரைகளை உருவாக்கியுள்ளனர்.

ஆபத்தான இடங்களில் சிக்கிக்கொண்டோரை மீட்கச் செல்லும் இயந்திர மனிதக் கருவிகள் சொந்தமாக ஒளியை உமிழவும் அந்தத் திரை உதவியாக இருக்கும்.

சுருங்கி விரியும் தன்மையுள்ள அந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு, HELIOS எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஒளி ஊடுருவக்கூடிய, சுருங்கி விரியும் அந்த ரப்பர் திரை, ஒளிரும் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.

குறைந்த மின் அழுத்தத்தில், அதிகமான மின்னணுக்களை அதனால் சேகரித்து வைத்துக்கொள்ளமுடியும். அதன்மூலம், அந்தத் திரையால் அதிகமான வெளிச்சத்தை உருவாக்கமுடியும்.

இதுவரை உள்ள அத்தகைய திரைகளைக் காட்டிலும் HELIOS, நான்கு மடங்கு குறைவான மின்சாரத்தில் இயங்கி, 20 மடங்கு கூடுதலான ஒளியை உமிழமுடியும்.

மனிதர்கள் தொட்டுப் புழங்கும் சாதனங்களிலும் இதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தமுடியும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்