Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

104 பெண்களைத் தகாத முறையில் படம் எடுத்த தேசியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவருக்கு 28 வாரச் சிறைத்தண்டனை

பெண்களைத் தகாத முறையில் படம் எடுத்ததற்காக தேசியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவருக்கு 28 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பெண்களைத் தகாத முறையில் படம் எடுத்ததற்காக தேசியப் பல்கலைக்கழக முன்னாள் மாணவருக்கு 28 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

27 வயது டெஸ்மண்ட் டே, 2017ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவராக இருந்த போது சக மாணவரைப் படமெடுக்க முயற்சி செய்தார். அதைப் பார்த்த மற்றொரு மாணவர் அதனைத் தடுத்து நிறுத்தினார்.

பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் புகார் செய்தார்.

டே, பல்கலையின் பல்வேறு இடங்களிலும் பொது இடங்களிலும் பெண்களைத் தகாத முறையில் எடுத்த காணொளிகளுடன் பிடிபட்டார். அவரது திறன்பேசி, மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அவர் சுமார் 600 ஆபாசப் படங்களை வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

நன்கு உடுத்திய இளம் பெண்களைப் பார்க்கும்போது தனக்கு அவ்வாறான ஆபாசக் காணொளிகளைப் பதிவு செய்யத் தோன்றும் என்று அவர் கூறினார்.

அவற்றை இணையத்திலும் அவர் பதிவேற்றம் செய்ததாகத் தெரியவந்தது.

டேயின் குற்றங்களுக்காக அவருக்கு 7 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்