Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழக இளநிலை மாணவர்கள் தங்கள் பாடங்களைச் சொந்தமாக வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பு

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக இளநிலை மாணவர்கள் தங்கள் பாடங்களை இனி அவர்களே சொந்தமாக வடிவமைத்துக்கொள்ளலாம்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக இளநிலை மாணவர்கள் தங்கள் பாடங்களை இனி அவர்களே சொந்தமாக வடிவமைத்துக்கொள்ளலாம்.

வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அது சாத்தியமாகும்.

அத்தகைய திட்டம் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

தங்களுக்கான பாடங்களைத் தாங்களே வடிவமைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் முதலில் 10 பேர் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும்.

தங்களின் பாடத்திட்ட அறிக்கையை, பல்கலைக் கழகப் பாடத்திட்ட வழிகாட்டிகளிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

பிறகு, வழிகாட்டிகளின் மேற்பார்வையில், மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.

பாடங்களுக்கான பயிற்சிகளும், கலந்துரையாடல்களும் வழிகாட்டிகளின் மேற்பார்வையில் நடக்கும்.

தொழில்முனைப்பு திறன் கொண்ட பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்குத தேசியப் பல்கலைக் கழகத்தில் படிக்க இன்னொரு திட்டம் கூடுதல் வாய்ப்பளிக்கிறது.

இங்குள்ள 5 பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்முனைப்புள்ள 200 மாணவர்களைப் பல்கலைக் கழகத்துக்குப் பரிந்துரைக்கலாம்.

கடந்த ஆண்டு, தேசியப் பல்கலைக் கழகத்தில் சேர்த்துகொள்ளப்பட்ட மாணவர்களில் 15 விழுக்காட்டினர் பலதுறைத் தொழில்கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள்.

2014ஆம் ஆண்டைக் காட்டிலும் அந்த விகிதம் நான்கு விழுக்காடு அதிகம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்