Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள், நியூஸிலந்து நாட்டவருக்கும் தானியங்கி குடியேற்ற நுழைவு அனுமதி முறை

சிங்கப்பூருக்கு வரும் நியூஸிலந்து நாட்டவரும், இங்கிருந்து நியூஸிலந்துக்குச் செல்லும் சிங்கப்பூரர்களும் நாளையிலிருந்து தானியங்கி முறையில் குடியேற்ற நுழைவு அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்கள், நியூஸிலந்து நாட்டவருக்கும் தானியங்கி குடியேற்ற நுழைவு அனுமதி முறை

(படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூருக்கு வரும் நியூஸிலந்து நாட்டவரும், இங்கிருந்து நியூஸிலந்துக்குச் செல்லும் சிங்கப்பூரர்களும் நாளையிலிருந்து தானியங்கி முறையில் குடியேற்ற நுழைவு அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

நியூஸிலந்துக் கடப்பிதழை வைத்திருக்கும் 6 வயதுக்கு மேற்பட்டோர், கடந்த ஈராண்டுகளில் இரண்டு முறையாவது சிங்கப்பூருக்குப் பயணம் செய்திருந்தால், அடிக்கடி சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம்.

அவர்களுடைய கடப்பிதழ், குறைந்தது 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் நிலையில் இருக்கவேண்டும்.

அதேபோல சிங்கப்பூரர்கள் நியூஸிலந்தில் உள்ள தானியங்கி முறையைப் பயன்படுத்தி அந்த நாட்டுக்குள் எளிமையாகச் செல்லவும் அனுமதி கிடைக்கும்.

திட்டத்தில் பங்கேற்பதற்கு, சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்தில் விண்ணப்பிக்கலாம். கட்டணம் கிடையாது.

இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான கூட்டுப் பங்காளித்துவத்தின் ஓர் அங்கமாக இது சாத்தியமாகிறது.

அதன்மூலம், இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக, சுற்றுப்பயண இணைப்புகள் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்