Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாதாரண நிலைத் தேர்வுகள் - தெரிந்துகொள்ளவேண்டியவை

சாதாரண நிலைத் தேர்வுகளைக் கடந்த ஆண்டு எழுதிய மாணவர்கள் இன்று அதற்கான முடிவுகளைப் பெற்றுள்ளனர். 

வாசிப்புநேரம் -
சாதாரண நிலைத் தேர்வுகள் - தெரிந்துகொள்ளவேண்டியவை

கோப்புப் படம்: Today

சாதாரண நிலைத் தேர்வுகளைக் கடந்த ஆண்டு எழுதிய மாணவர்கள் இன்று அதற்கான முடிவுகளைப் பெற்றுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் விரைவுநிலையில் உள்ள உயர்நிலை 4 மாணவர்கள், சாதாரண நிலையிலுள்ள (ஏட்டுக்கல்வி) உயர்நிலை 5 மாணவர்கள், தகுதிபெறும் தனியார் மாணவர்கள் ஆகியோர் சாதாரண நிலைத் தேர்வுகளை எழுதுகின்றனர்.

சாதாரண நிலைத் தேர்வுகள் 1971இல் அறிமுகம் கண்டன.

அப்போது அவை பிரிட்டிஷ் சாதாரண நிலை தேர்வுகளைத் தழுவியிருந்தன.

இந்த வழக்கம் 2006இல் மாற்றப்பட்டது.

சிங்கப்பூர் கல்வித்திட்டத்துக்குப் பொருந்தும் விதத்தில் தேர்வு மாற்றியமைக்கப்பட்டது.

கல்வி அமைச்சினுடைய கல்வித்திட்டத்தின்கீழ் வழக்கமாக உள்ள பாடங்களைத் தவிர்த்து மாணவர்களுக்குக் கூடுதல் தெரிவுகள் கொடுப்பதற்காக O-Level School Initiated Electives எனும் திட்டம் 2005இல் தொடங்கப்பட்டது.

சாதாரண நிலைப் பாடங்களுக்குப் பதிலாக மாணவர்கள், இந்தத் திட்டத்தின் கீழுள்ள பாடங்களுக்குப் பதிவுசெய்துகொள்ளலாம்.

பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் பயன்முறைப் பாடங்களைப் பயில விரும்பும் மாணவர்கள் அவற்றை உயர்நிலைப் பள்ளியிலேயே முயன்று பார்க்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் 2008இலிருந்து இணைந்து இத்தகைய பாடங்களை வழங்கிவருகின்றன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்