Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரிட்டனில் காணாமற்போன 'O' நிலைத் தேர்வுத்தாள்கள்-32 சிங்கப்பூர் மாணவர்கள் பாதிப்பு

GCE சாதாரணநிலை உயர் கணக்குத் (Additional Mathematics)  தேர்வுத்தாள்கள் பிரிட்டனில் காணாமற்போனதில் 32 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 

வாசிப்புநேரம் -

GCE சாதாரணநிலை உயர் கணக்குத் (Additional Mathematics) தேர்வுத்தாள்கள் பிரிட்டனில் காணாமற்போனதில் 32 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து, அந்தத் தேர்வின் இரண்டாம் தாளை (Paper 2) மீண்டும் எழுதும் வாய்ப்பு அந்த மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் நன் ஹூவா (Nan Hua) உயர்நிலைப்பள்ளி, ஹோங் காஹ் (Hong Kah) உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

தேர்வுத்தாள்களைத் திருத்தவேண்டிய கேம்பிரிட்ஜ் (Cambridge) ஆசிரியர், அத்தாள்களை வைத்திருந்த கைப்பையை ரயில் நிலையத்தில் தொலைத்துவிட்டதாக சிங்கப்பூர்த் தேர்வுகள் மதிப்பீட்டுக் கழகம் கூறியது.

அந்தச் சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடந்தது.

கைப்பை காணமற்போனது குறித்து அந்த ஆசிரியர் மறுநாள் கேம்பிரிட்ஜ் தேர்வுக் கழகத்திடம் கூறியிருக்கிறார்.

அதனையடுத்து விசாரணை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ், தேர்வுத்தாள்களைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டது; ஆனால் பலனில்லை.

அந்தத் தாள்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்வுத்தாள்கள் காணமற்போனது குறித்து இன்று மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அவர்களது முதலாம் (Paper 1) உயர் கணக்கு முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், காணாமற்போன இரண்டாம் தாளை மீண்டும் எடுக்க விருப்பப்படும் மாணவர்கள், வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தேர்வுக்கு அமரலாம்.

அதற்கான மதிப்பெண்கள் அம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்