Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"O" நிலைத் தேர்வு முடிவுகள்: சுமார் 85 விழுக்காட்டு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி

பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வுகளில் 84.8 விழுக்காட்டு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று (ஜனவரி 14)  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 

வாசிப்புநேரம் -
"O" நிலைத் தேர்வு முடிவுகள்: சுமார் 85 விழுக்காட்டு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி

(படம்: ஷரளா தேவி)

பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வுகளில் 84.8 விழுக்காட்டு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று (ஜனவரி 14) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 84.3 விழுக்காடாக இருந்தது.

1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 5 பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதம் இவ்வாண்டு ஆக அதிகமாக இருந்தது.

கடந்தாண்டு தேர்வெழுதிய மாணவர்கள் - 26,750
5 பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் - 22,688

குறைந்தது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் - 99.9 விழுக்காடு
குறைந்தது 3 பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் - 96.4 விழுக்காடு மாணவர்கள்

தொழில்நுட்பக் கல்விக் கழகம், தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்விக் கழகம் ஆகியவற்றுக்கு மாணவர்கள் இன்றிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்