Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாதாரண நிலைத் தேர்வு: வடிவமைப்பும் தொழில்நுட்பமும், இசை பாடத் திட்டங்களில் மாற்றங்கள்

வடிவமைப்பும் தொழில்நுட்பமும், இசை ஆகிய இரு பாடத் திட்டங்களின்கீழ் பயிலும் மாணவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வை எழுத வேண்டியிருக்கும்.

வாசிப்புநேரம் -
சாதாரண நிலைத் தேர்வு: வடிவமைப்பும் தொழில்நுட்பமும், இசை பாடத் திட்டங்களில் மாற்றங்கள்

(படம்: TODAY/Ernest Chua))

வடிவமைப்பும் தொழில்நுட்பமும், இசை ஆகிய இரு பாடத் திட்டங்களின்கீழ் பயிலும் மாணவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வை எழுத வேண்டியிருக்கும்.

புதிய மாற்றங்களின்கீழ் அடிப்படைத் திறனிலும் உண்மை நிலவரத்துக்கேற்ற வகையில் மாணவர்களைத் தயார்செய்வதிலும் அதிகக் கவனம் செலுத்தப்படும்.

அதற்கு ஏற்றவாறு மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்படும்.

வடிவமைப்பு, தொழில்நுட்பப் பாடத் திட்டத்தின்கீழ் அவ்வாறு 30 முதல் 40 விழுக்காட்டு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு CNAயிடம் தெரிவித்தது.

இசைப் பாடத் திட்டத்தின்கீழ் எழுத்து வடிவில் அணுகப்படும் தேர்வு முடிவுகள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றது அமைச்சு.

வடிவமைப்பு, தொழில்நுட்பப் பாடத் திட்டத்தின்கீழ் 5,200 மாணவர்களும், இசை அல்லது உயர்நிலை இசைப் பாடத் திட்டத்தின்கீழ் 250 மாணவர்களும் அடுத்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வை எழுதுவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்