Images
  • olevel
    (படம்:  CNA)

GCE சாதாரண நிலைத் தேர்வு முடிவு: 83% மாணவர்கள் 5 அல்லது அதற்கும் மேலான பாடங்களில் தேர்ச்சி

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு GCE சாதாரண நிலைத் தேர்வு எழுதிய 29,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 83 விழுக்காட்டுக்கும் அதிகமான மாணவர்கள் ஐந்து அல்லது அதற்கும் மேலான பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2016ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு ஐந்து அல்லது அதற்கும்  மேலான பாடங்களில் தேர்ச்சி  மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது.

தேர்வு எழுதிய 1500க்கும் மேற்பட்ட தனியார் மாணவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றதாகக் கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டு வாரியமும் தெரிவித்தன. 

வழக்கநிலை ஏட்டுக் கல்வி மாணவர்களில் சுமார் 370 பேர் சாதாரண நிலையில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்வுகளை எழுதியிருந்தனர். 

அவர்கள், சாதாரண நிலை மாணவர்களுக்கு ஈடாகத் தேர்ச்சி பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 


தேர்வு முடிவுகளைக் கொண்டு தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்வி நிலையம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பக்க விரும்பும் மாணவர்கள், கூட்டுச் சேர்க்கை நடவடிக்கையின்வழி இன்று முதல் அடுத்த வாரம் புதன்கிழமை (17 ஜனவரி) மாலை 4 மணிவரை பதிவுசெய்யலாம். 

பிற தொடக்கக் கல்லூரிகளின் விவரங்கள் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும்.

 

Top