Images

இந்தியர்களிடையே உடல் பருமன்...காத்திருக்கும் ஆபத்து...என்ன செய்வது?

சிங்கப்பூரில் உடல் பருமனாக இருப்போரின் எண்ணிக்கை கடந்த ஈராண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.

எடை கூடக்கூட உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் கூடலாம் என்று எச்சரிக்கின்றனர் சுகாதார அதிகாரிகள்.

தேசிய மக்கள்தொகைச் சுகாதாரக் கருத்தாய்வின் முடிவுகளின்படி 17.7 விழுக்காட்டு இந்தியர்கள் பருமனாக இருக்கின்றனர்.

அவர்களிடையே, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகக் கூறுகின்றனர், நிபுணர்கள்.

அதற்கு இந்தியர்களிடம் வயிற்றுக் கொழுப்பாகக் கருதப்படும் 'Viceral fats', அதிகமுள்ளதே காரணம் என்று கூறுகிறார், சிங்கப்பூர் நீரிழிவுச் சங்கத்தின் தலைவர், டாக்டர் கல்பனா பாஸ்கரன்.

நாளடைவில் இன்சுலின் (insulin) எதிர்ப்பு எனப்படும் ஒருவகையான தன்மை உருவாகிறது. நமது கணையம் இன்சுலினைச் சுரந்தாலும் அந்த இன்சுலின் வேலைசெய்யாது.

இதனால் ரத்ததில் உள்ள சர்க்கரை அதிகரித்து அதுவே நீரிழிவாக மாறுகிறது,

என்று அவர் கூறினார்.

கொழுப்பைக் குறைப்பதற்கு என்ன செய்வது?

உடற்பயிற்சி...என்று கூறுகின்றார், Extreme Fitness எனும் உடற்பயிற்சிக் கூடத்தின் உடற்பயிற்சி நிபுணர், ஷான் கார்த்திக்.

ஒரே நேரத்தில் உடலின் பல்வேறு தசைகளை ஒன்றாக இயக்கவைக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

யோகா, நடைப்பயிற்சி போன்றவை உடலுக்கு நல்லதுதான். ஆனால் கலோரிகளைக் குறைப்பதில் அவை பெரும்பங்கு வகிக்காது. Metal Ropes, Deadlifts, Squads போன்ற பயிற்சிகள் மிகச் சிறந்தவையாக இருக்கும்,

என்று ஷான் கார்த்திக் சொன்னார்.

மேலும் அறிவோம் இன்றிரவு செய்தியில்! 

Top