Images
  • oBike
    படம்: Kenneth Lim

பாதிக்கப்பட்ட oBike பயனீட்டாளர்கள் வைப்புத்தொகையை இணையத்தில் கோரலாம்

சிங்கப்பூர் oBike பயனீட்டாளர்கள் தங்களின் மீதமிருக்கும் வைப்புத்தொகையை இணையத்தில் கோரலாம் என்று சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்ச் சங்கம் (CASE) இன்று (ஜூலை 12) தனது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள் கடன்பற்று அட்டை அல்லது PayPal அறிக்கை போன்ற உரிய ஆவணங்களுடன் தங்களின் கோரிக்கைகளை, www.obikedepositholders.com என்ற இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளை, நிறுவனத்தைக் கலைப்பதற்குப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் ஆராய்வர்.


உங்கள் கருத்து

Top