Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாசிர் கூடாங் ரசாயனக் கசிவு: புலாவ் உபின் தீவில் OBS கடல்சார் நடவடிக்கைகள் தற்காலிக நிறுத்தம்

சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கை அமைப்பான, Outward Bound Singapore, புலாவ் உபின் (Pulau Ubin) தீவில் உள்ள அதன் அனைத்து கடல் சார்ந்த நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
பாசிர் கூடாங் ரசாயனக் கசிவு: புலாவ் உபின் தீவில் OBS கடல்சார் நடவடிக்கைகள் தற்காலிக நிறுத்தம்

(படம்: Outward Bound Singapore/Facebook)

சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கை அமைப்பான, Outward Bound Singapore, புலாவ் உபின் (Pulau Ubin) தீவில் உள்ள அதன் அனைத்து கடல் சார்ந்த நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஜொகூரின் பாசிர் கூடாங் நகருக்கு அருகில் புலாவ் உபின் தீவு அமைந்திருக்கிறது.

பாசிர் கூடாங்கில் அண்மையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதில் 3,500க்கும் அதிகமானோருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, Outward Bound Singapore அமைப்பின், புலாவ் உபின் தீவு வளாகத்தில் அனைத்து கடல் சார்ந்த நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரில் கடல் நீரும், காற்றுத் தரமும் வழக்கமான நிலைகளில் இருப்பதாக சிங்கப்பூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்ததைத் தொடர்ந்தும் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்