Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்னிலக்கக் கட்டண முறைக்கு மாறும் மேலும் கூடுதலான சிறிய நடுத்தர நிறுவனங்கள்

OCBC வங்கி மேற்கொண்ட கருத்தாய்வில் கலந்து கொண்ட நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பகுதி நிறுவனங்கள், 2023ஆம் ஆண்டுக்குள் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாறப் போவதாகக் கூறின.

வாசிப்புநேரம் -
மின்னிலக்கக் கட்டண முறைக்கு மாறும் மேலும் கூடுதலான சிறிய நடுத்தர நிறுவனங்கள்

(படம்:Wendy Wong)

சிங்கப்பூரில் அதிகமான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கக் கட்டண முறைக்கு மாறி வருவதாகக் கருத்தாய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

OCBC வங்கி மேற்கொண்ட கருத்தாய்வில் கலந்து கொண்ட நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பகுதி நிறுவனங்கள், 2023ஆம் ஆண்டுக்குள் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாறப் போவதாகக் கூறின.

கருத்தாய்வில் கலந்துகொண்ட 200 சிறிய, நடுத்தர நிறுவனங்களில் 45 விழுக்காட்டு நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டுக்குள் காசோலைப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளன.

2025ஆம் ஆண்டுக்குள் காசோலையற்ற சமுதாயமாக மாறும் சிங்கப்பூரின் இலக்கிற்கு ஏற்ப இது அமைந்துள்ளதாக OCBC வங்கி கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்