Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு

சிங்கப்பூரில் செல்வந்தர்கள் வசிக்கும் செந்தோசா கோவ் பகுதியில் ஒரு குடியிருப்பாளரின் நடவடிக்கை அக்கம் பக்கம் உள்ளவர்களிடையே மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாசிப்புநேரம் -
செல்வந்தரின் வினோத வீடுகளால் செந்தோசா கோவ் பகுதியில் சலசலப்பு

(படங்கள்: TODAY)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூரில் செல்வந்தர்கள் வசிக்கும் செந்தோசா கோவ் பகுதியில் ஒரு குடியிருப்பாளரின் நடவடிக்கை அக்கம் பக்கம் உள்ளவர்களிடையே மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றவர்களும் பயன்படுத்தும் பொது இடம் வரை செல்வந்தருடைய தோட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதால் அது பிறருக்கு இடையூறாக இருப்பதாய்ச் சிலர் கூறுகின்றனர்.

வினோதமாகக் காட்சியளிக்கும் அவரின் 5 வீடுகள் அக்கம் பக்கம் உள்ள சிலரின் கண்களை உறுத்துகின்றன. அவரின் வீடுகளில் ஒன்று எகிப்திய வழிபாட்டுத் தலம் போல உள்ளது. மற்றொன்று 'Flintstones கேலிச் சித்திரத்தின் அடிப்படையில் ஆதிகால வீட்டைப் போல அமைக்கப்பட்டுள்ளது.

அதிருப்தியான அண்டைவீட்டார் ஒருபுறமிருக்க, செல்வந்தருடனான தனிப்பட்ட பிரச்சினைகளால் குடியிருப்பாளர்கள் சிலர் அவருடைய தோட்டத்தைப் பற்றிப் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செந்தோசா கோவ் பேட்டையை நிர்வகித்து வரும் நிறுவனம், செல்வந்தரின் தோட்ட வேலைகளைப் பற்றி அறிந்துள்ளதாகத் TODAY இணையப்பக்கத்திடம் தெரிவித்தது.

பொது இடங்களைப் பயன்படுத்தும் வழிமுறை குறித்து அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அது கூறியது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்