Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

OFO பகிர்வு சைக்கிள் சேவை உரிமம் தற்காலிகத் தடை

நிலப் போக்குவரத்து ஆணையம், பகிர்வு சைக்கிள் சேவை வழங்கும் Ofo நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
OFO பகிர்வு சைக்கிள் சேவை உரிமம் தற்காலிகத் தடை

(படம்: Today)

நிலப் போக்குவரத்து ஆணையம், பகிர்வு சைக்கிள் சேவை வழங்கும் Ofo நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.

இதனால் நிறுவனத்தின் சைக்கிள் சேவை இன்றிலிருந்து நிறுத்தி வைக்கப்படும்.

பொது இடங்களில் உள்ள அனைத்து Ofo சைக்கிள்களையும் அடுத்த மாதம் 13ஆம் தேதிக்குள் நிறுவனம் அகற்றவேண்டும்.

சைக்கிள் பகிர்வுச் சேவை வழங்கிவந்த Ofo நிறுவனம், தொடர்ந்து விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதே ஆணையத்தின் முடிவுக்குக் காரணம்.

பொது இடங்களில் உள்ள Ofo சைக்கிள்களின் எண்ணிக்கையைக் குறைக்காதது, சைக்கிள்களை நிறுத்துவதற்கு QR குறியீட்டு முறையைப் பின்பற்றாதது ஆகியவை நிறுவனம் மீறிய விதிகளில் சில.

குறிப்பிட்ட இந்தக் காலக்கட்டத்தில் Ofo சைக்கிள்களைப் பயனீட்டாளர்களால் பயன்படுத்த முடியாது.

விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் உரிமத்தின் மீதான தடையை ஆணையம் நீக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், Ofo நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் இல்லையெனில் அதன் உரிமம் ரத்து செய்யப்படக்கூடும் என, ஆணையம் எச்சரித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்