Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி சென்ற மாதம் 10 விழுக்காடு குறைவு

மாதாந்தர அடிப்படையில் சென்ற மாத ஏற்றுமதி 0.6 விழுக்காடு குறைந்தது. ஒப்புநோக்க, மார்ச் மாதத்தில் அது 14.3 விழுக்காடு வீழ்ச்சி கண்டிருந்தது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி சென்ற மாதம் 10 விழுக்காடு குறைவு

(படம்: AFP)

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் சென்ற மாதம் 10 விழுக்காடு குறைந்தது. பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்ததைக் காட்டிலும் அது 4 விழுக்காடு அதிகம்.

மாதாந்தர அடிப்படையில் சென்ற மாத ஏற்றுமதி 0.6 விழுக்காடு குறைந்தது. ஒப்புநோக்க, மார்ச் மாதத்தில் அது 14.3 விழுக்காடு வீழ்ச்சி கண்டிருந்தது.

மின்னியல், மின்னியல் சாராப் பொருட்கள் இரண்டின் ஏற்றுமதியும் சரிந்தது. ஆண்டு அடிப்படையில், மின்னியல் ஏற்றுமதி வீழ்ச்சியடையும் வேகம் சற்றுக் குறைந்து 16.3 விழுக்காடாக இருந்தது.

மின்னியல் சாராப் பொருள்களின் ஏற்றுமதியில், மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி சுமார் 47 விழுக்காடும், சிறப்பு இயந்திரங்களின் ஏற்றுமதி சுமார் 23 விழுக்காடும் குறைந்தன.

ஹாங்காங், அமெரிக்கா தவிர ஏனைய பெரும்பாலான பெரிய சந்தைகளுக்கான ஏற்றுமதி சுருங்கியதாக Enterprise Singapore வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்ததற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி சுமார் 25 விழுக்காடு குறைந்தது ஒரு முக்கியக் காரணம். ஜப்பானுக்கான ஏற்றுமதி 31 விழுக்காடும், சீனாவுக்கான ஏற்றுமதி சுமார் 6 விழுக்காடும் குறைந்தன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்